முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7-பேர் விடுதலை குறித்து முதல்வர் வலியுறுத்த ராமதாஸ் கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 7-பேர் விடுதலை குறித்து முதல்வர்  ஸ்டாலின் கவர்னரிடம் வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் கைதாகி இன்றுடன் (நேற்றுடன்) 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற பரிந்துரை தீர்மானத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தது. 

இருப்பினும் இதுவரை எழுவர் விடுதலை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து கவர்னரிடம் வலியுறுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையின் மீது விரைந்து விடிவெடுக்க முதல்வர் ஸ்டாலின், கவர்னரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் தமிழக அரசின் சார்பில் வாதிடுவதற்கு மனித உரிமைகளில் அக்கறை கொண்ட திறமையான மூத்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள டாக்டர் ராமதாஸ், மிக விரைவில் இருள் விலகி ஒளி பிறக்கட்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து