முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரத்தில் இயங்கும் குட்டி விமான டாக்சி : அமெரிக்காவில் அறிமுகம்

வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கலிபோர்னியா : எரிபொருள் இல்லாமல் முற்றிலும் மின்சார பேட்டரியால் இயங்கும்  குட்டி விமான டாக்சினை அமெரிக்காவில் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

மேக்கர் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமான டாக்சியின் சிறப்பு அம்சங்கள் குறித்து கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு விளக்கப்பட்டது. முற்றிலும் பேட்டரியால் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு இது தீங்கு ஏற்படுத்தாது. 

ஹெலிகாப்டர் போன்ற வாகனத்தில் செங்குத்தாக மேல் எழும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மேக்கர், பின்னர் விமானம் போன்று பறக்கும் திறனுடையது. மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த குட்டி விமானத்தை முதல் கட்டமாக 100 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள நகரங்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 50 கிலோ மீட்டர் தூர பயணத்திற்கு கட்டணமாக இந்திய மதிப்பீட்டில் சுமார் 4000 ரூபாய் வசூலிக்க ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் 2024-ம் ஆண்டு தான் இந்த பறக்கும் டாக்சி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 பேர் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள மேக்கர் விமானத்திற்கு அனுமதி கோரி அமெரிக்க விமானத்துறைக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கும் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம், சில மாதங்களில் அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து