முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சனிக்கிழமை, 12 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலர் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. இதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தைச் செயல்படுத்துவது, தமிழில் அர்ச்சனை செய்வது, தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும். தமிழில் அர்ச்சனை செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படும். முக்கிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகை வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர் , செல்போன் எண் அறிவிப்பு பலகையில் இடம் பெறும். ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையே ஜீயர்கள் தொடர்ந்து நியமிக்கப்படுவர். 

100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக இருப்பார்கள். பெண்களும் அர்ச்சகர்களாக  விருப்பப்பட்டால், தமிழக அரசின் உதவி மூலம் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள். கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 30 கோயில் யானைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து