MK-Stalin 2021 05 09 - Copy

Source: provided

சேலம் : டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயப் பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து நேற்று தண்ணீரை திறந்து வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- நமக்கு தேவையான தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?

பதில்:- இது சம்பந்தமாக அந்த துறையினுடைய அமைச்சருக்கு நினைவூட்டி ஒரு கடிதமும் எழுதி இருக்கிறோம். நீங்கள் கேட்கின்ற கேள்விக்கு அதில் பதில் இருக்கிறது.

கேள்வி:- குடிமராமத்து திட்டம் முழுமையாக  செயல்படுத்தப்பட்டு இருக்கிறதா?

பதில்:- இப்போது ஆட்சிக்கு வந்திருக்கிறோம், அதனுடைய விவரங்கள் எல்லாம் சேகரித்து, பத்திரிகையாளர்களுக்கு நாங்களே தெரிவிக்கின்றோம். 

கேள்வி:- கொரோனா இரண்டாவது அலையை நீங்கள் ஒருமாத காலத்திலேயே கட்டுப்படுத்தி விட்டீர்கள். இப்போது பாதிக்கப்பட்டவர்களை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன?

பதில்:- கொரோனாவை பொறுத்தவரைக்கும் இப்போது நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் இருக்கிறது, இல்லை என்று மறுக்கவில்லை. அதையும் படிப்படியாக குறைப்பதற்கான முயற்சிகளில் இந்த அரசு முழுமையாக ஈடுபட்டு இருக்கிறது. தினசரி தொற்று நாங்கள் ஆட்சிக்கு வந்த போது 36 ஆயிரத்தைத் தாண்டி இருந்தது. அது 60 ஆயிரத்தைத் தொடும் என்ற சூழ்நிலை இருந்தது.  அதனால் தான் நாங்கள் முழு ஊரடங்கை பிறப்பித்து, கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டோம்.

இப்போது அது படிப்படியாகக் குறைந்து நேற்று முன்தினம் 16 ஆயிரத்துக்கும் கீழாகக் குறைந்திருக்கிறது. குறிப்பாகச் சென்னையைப் பொறுத்தவரைக்கும் பார்த்தீர்கள் என்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்த போது 7,000ஆக இருந்தது; இப்போது அது 1,000 ஆகி இருக்கிறது. அதேபோல கோவையைப் பொறுத்தவரைக்கும் தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது 5,000-த்தை தொட்டுக் கொண்டு இருந்தது. இப்போது அங்கே 2,000ஆக ஆகியிருக்கிறது. சேலத்தில் 1,500  இருந்தது, இப்போ 900 ஆகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, படுக்கைத் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, இது எல்லாம் இருந்துகொண்டு இருந்தது.

அதை எல்லாம் இன்றைக்கு பிரச்சினை இல்லாத சூழ்நிலையை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். போதுமான அளவிற்குப் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறோம், ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தி இருக்கிறோம். சென்னையில் கொரோனா கட்டளை மையம் உருவாக்கி இருக்கிறோம். அதில் இப்போது அதிகபட்சமாக பார்த்தீர்கள் என்றால் மே 20-ம் தேதி அன்று மட்டும் அந்தக் கட்டளை மையத்திற்கு 4768 அழைப்புகள் வந்தது.

ஆனால் இன்றைய நிலவரம் 200 முதல் 300 அழைப்புகள்தான். அந்த அளவிற்குக் கட்டுப்படுத்தி இருக்கிறோம். இன்னும் படிப்படியாகக் குறைப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நிச்சயமாக குறைப்போம். தடுப்பூசிகளைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் வேண்டும் என்று ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருக்கிறோம். மக்களுடைய வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு சில தளர்வுகளை அறிவித்திருக்கிறோம்.

அந்தத் தளர்வுகளைப் பொதுமக்கள் மெத்தனமாக எடுத்துக் கொள்ளாமல், அலட்சியப்படுத்தாமல், ஒத்துழைப்பைத் தரவேண்டும். அவசியம் இல்லாமல், அவசரம் இல்லாமல் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதைக் குறைக்க வேண்டும், முகக்கவசத்தை அணிய வேண்டும், அரசு என்னென்ன வழிமுறைகளை எல்லாம் சொல்லியிருக்கிறதோ அதை எல்லாம் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் உங்கள் மூலமாக நான் வலியுறுத்தி, வற்புறுத்தி, இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் பொதுமக்களைக் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தீர்கள் என்றால் நிச்சயமாக, முழுமையாகக் கட்டுப்படுத்தி விடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. 

 கேள்வி:-  டாஸ்மாக் கடைகளைத் திறப்பது குறித்து?

பதில்:- சில தளர்வுகளைக் கொடுத்துதான் ஊரடங்கை அமல்படுத்தி கொண்டு இருக்கிறோம். அதுவும் குறிப்பாக மேற்கு மண்டலத்தை பொறுத்தவரைக்கும் அந்த தளர்வு கூட கிடையாது. அதில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறோம். அந்தத் தளர்வுகள் இல்லாமல் முழுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்துக் கொண்டு இருக்கிறோம். ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்திருக்கும் காரணத்தினால் தான் சில தளர்வுகளைக் கொடுத்திருக்கிறோம். அந்த அடிப்படையில்தான் டாஸ்மாக் கடைகளுக்கும் அந்தச் சலுகைகளைக் கொடுத்திருக்கிறோம்.        

கேள்வி:- தங்களது டெல்லி பயணம் குறித்து?.

பதில்:- 17-ம் தேதி பிரதமரைச் சந்திப்பதற்காக நேரம் கேட்டு இருக்கிறேன்.  Tentative ஆகச் சொல்லி இருக்கிறார்கள். இன்னும் உறுதிசெய்யவில்லை. உறுதிசெய்தவுடன் உங்களுக்குச் சொல்கிறோம். இவ்வாறு முதல்வர் பதிலளித்தார். 

 


அமெரிக்கா - ரஷ்யா இடையே நடக்கும் Cyber War | Ransomware Cyber Attack



YAMAHA RX100 Styleல் அசத்தலான எலக்ட்ரிக் பைக்|5 ரூபாய்க்கு 100 கிலோமீட்டர்| Komaki MX3 E-Bike Review



தாய் பால் கொடுப்பதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க முடியுமா? | Benefits of Mothers Milk



ஒரு பைசா செலவில்லாமல் ஓடும் மோட்டார் சைக்கிளை தயாரித்த மாணவர்



தேனீ வளர்க்க கற்று கொடுத்து 80 பேரை லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வைத்து அசத்தல்



எனக்குEmotional Scenesல் நடிக்க ரெம்ப பிடிக்கும் சீமராஜா பட நடிகை அபிநயா | Seema Raja Actress Abhinaya



இள வயதிலேயே இந்தியன் சாம்பியன் டைட்டில் வென்ற கோம்பை நாய் |பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 18



Whatsapp Call மூலம் பெண்களை மயக்கி பணம் கேட்டு மிரட்டல்| மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? இதை அவசியம் சாப்பிடுங்க | K.தம்பிதுரை சித்த மருத்துவர்



22 கின்னஸ் சாதனைகளை படைத்து அசத்திய தமிழர் | 22 Guinness World Records Title Winner



Kanni | வளர்த்தவர் இருந்தால் மட்டுமே குட்டி போடும் பாசமான நாய்| பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 17



Tamil General Knowledge Questions and Answers|Brain Games Tamil|Tamil quiz | Interesting GK| Part 01



பிச்சை எடுத்து 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தானம் செய்த பிச்சைக்காரர் |Beggar Donates 50 Lakh Rupees



வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி? | Job Scams


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து