முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மொபைல் போன்கள்: தெலுங்கானா அரசு முடிவு

சனிக்கிழமை, 12 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசரகால எண்களுடன் மொபைல் போன்கள் வழங்கப்பட உள்ளன.

நாட்டின் கொரோனா 2-வது அலையில் முதல் அலையை விட அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.  இதில், வயது வித்தியாசமின்றி பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை அனைவரும் தொற்றுக்கு ஆளாகினர்.   இதில், கணவன், மனைவி என இருவருமே உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன.  இதனால், அவர்களது குழந்தைகள் ஆதரவின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டது.  அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவச கல்வி, நிதியுதவி உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளன. 

இந்நிலையில், தெலுங்கானாவில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு உதவும் வகையில், அவர்களுக்கு அவசரகால எண்களுடன் மொபைல் போன்கள் வழங்க மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நல துறை முடிவு செய்துள்ளது. 

இந்த எண்களை கொண்டு, அவர்கள் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும்.  யாரை தொடர்பு கொள்ள வேண்டும்.  தொடர்புடைய அதிகாரிகளுடன் எப்பொழுது பேச வேண்டும் என்பது பற்றி குழந்தைகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு உள்ளது என மாவட்ட நல துறை அதிகாரி அக்கேஷ்வர் ராவ் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து