முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் இன்று முதல் தளர்வுகள்: முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

டெல்லியில் கொரோனா தொற்றின் 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் டெல்லியில் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் 28 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 497 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதனையடுத்து டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று காலை 5 மணி முதல் டெல்லியில் பல்வேறு தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

இதன்படி டெல்லியில் இன்று முதல் வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் வருமாறு;- 

அனைத்து கடைகளும், மால்களும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் காலை 9 முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம். 

 உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி. 

 மெட்ரோ ரெயில் மற்றும் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளுடன் செயல்பட அனுமதி 

ஆட்டோக்கள், டேக்சிகளில் 2 பயணிகளுக்கு மட்டும் பயணம் செய்யலாம் 

வழிபாட்டுத் தலங்கள் பக்தர்களின்றி திறக்க அனுமதி 

திருமணம், இறுதிச்சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதி 

இது தவிர பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், திரையரங்குகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி மையங்கள், பூங்காக்கள் ஆகியவற்றிற்கான தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து