முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டும்: சேவாக்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்றும் ரோகித் சர்மா- டிரென்ட் போல்ட் இடையிலான போட்டியை தான் எதிர்நோக்குவதாக சேவாக் தெரிவித்துள்ளார்.

சிறந்த டெஸ்ட் அணி...

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் வருகிற 18-ம் தேதி தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி கடந்த இரண்டு வருடங்களில் சிறந்த டெஸ்ட் அணியாக கருதப்படும்.

கடும் நெருக்கடி.... 

இங்கிலாந்து சீதோஷ்ண நிலை நியூசிலாந்துக்கு சற்று கூடுதல் சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவும் கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என சேவாக் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பலத்துடன் விளையாட...

இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘18-ம் தேதி தொடங்கும் போட்டிக்கான ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான் நம்பும் ஒரு விசயம், நீங்கள் உங்களுடைய பலத்துடன் விளையாட வேண்டும் என்பதுதான். இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் அது சிறந்த விசயமாக இருக்கும். ஏனென்றால், 4-வது மற்றும் 5-வது நாளில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் திறமையை வெளிப்பத்தக் கூடும் என நம்புகிறேன்.

கூடுதல் பலம்... 

இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்கு நல்லது. அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆல்-ரவுண்டர் திறமை பெற்றவர்கள். இருவரும் பேட்டிங்கிற்கு கூடுதல் பலம் சேர்ப்பார்கள். இவர்கள் இருவர் இருக்கும்போது, 6-வது பேட்ஸ்மேன் தேவையில்லை.

விருந்தாக இருக்கும்...

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு டிரென்ட் போல்ட்- டிம் சவுத்தி ஜோடி கடுமையான சவால் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருவராலும் இரண்டு பக்கமும் பந்தை ஸ்விங் செய்ய முடியும். இருவரும் இணைந்து பந்து வீசுவது திறமைமிக்கதாக இருக்கும். ரோகித் சர்மா- டிரென்ட் போல்ட் இடையிலான போட்டியை எதிர்நோக்குகிறேன். ரோகித் சர்மா களத்தில் செட்டாகி நிற்பது, டிரென்ட் போல்டின் முதல் ஸ்பெல்லை ஆஃப் செய்வது பார்ப்பதற்கு விருந்தாக இருக்கும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து