முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலின் புதிய பிரதமராக பென்னெட் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெருசலேம் : இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னெட் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 12 ஆண்டுகளாக இஸ்ரேலின் பிரதமராக செயல்பட்டு வந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது.   ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்கிற நிலையில் புதிய அரசு அமைப்பதற்கு பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு 28 நாள் காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது. 

இதனால், அங்கு மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை அரசை கூட்டணியாக உருவாக்கியது.  இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் வலதுசாரி கட்சி, தீவிர வலதுசாரி கட்சி, மய்ய கட்சி, அரபு ஆதரவு கொண்ட கட்சி என்று எல்லா விதமான கட்சிகளும் உள்ளன. இப்படி பலவிதமான கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் இடையே கூட்டணி ஒப்பந்தம் எட்டப்பட்டது.

கடந்த தேர்தலில் 2-வது இடத்தை பிடித்த யேஷ் அதித் கட்சியின் தலைவர் யெய்ர் லாப்பிட் தலைமையில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் முக்கிய கட்சியாக தீவிர வலதுசாரி கட்சியான யாமினா கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சியின் தலைவராக இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சரான நப்தாலி பென்னெட் இடம்பெற்றுள்ளார்.   

இதற்கிடையில், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் யெய்ர் லாப்பிட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைத்தது. இதன் மூலம் 12 ஆண்டுகள் இஸ்ரேலின் பிரதமராக செயல்பட்டு நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து யெய்ர் லாப்பிட் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்ரேலின் புதிய பிரதமராக யாமினா கட்சி தலைவரும், பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சருமான நப்தாலி பென்னெட் பொறுப்பேற்றுள்ளார். 

இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நப்தாலி பென்னெட்டிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நப்தாலி பென்னெட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார்.  

இஸ்ரேலின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நஃப்தாலி பென்னெட் 2 ஆண்டுகள் பதவி வகிப்பார். அதன் பின்னர் ஆட்சியின் மீதமுள்ள அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு யேஷ் அதித் கட்சியின் தலைவரான யெய்ர் லாப்பிட் இஸ்ரேலின் பிரதமராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், இஸ்ரேல் புதிய பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘மரியாதைக்குரிய நப்தாலி பென்னட், இஸ்ரேலின் பிரதமர் ஆனதற்கு எனது வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு தூதரக உறவுகள் மேம்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளை நாம் கொண்டாடும் சமயத்தில், நான் தங்களைச் சந்திக்கவும், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை ஆழப்படுத்தவும் எதிர்நோக்கியிருக்கிறேன் என கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து