முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி: மாநிலத்தலைவர் அறிவிப்பு

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத்தலைவர் நானா பெட்டோலோ தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.  இந்த கூட்டணி ஆட்சி மூலம் மராட்டிய மாநிலத்தின் முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். 2019-ம் ஆண்டு முதல் மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், மராட்டிய மாநிலத்தில் அடுத்த சட்டசபை தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கான, முன்னெடுப்புகள் இப்போதே தொடங்கி விட்டன. அதுமட்டுமின்றி 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவும் பல்வேறு கட்சிகள் தற்போதே ஆயத்த நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி விட்டன. 

இந்நிலையில், மராட்டியத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற்ற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத்தலைவர் நானா பெட்டோலோ நேற்று தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் தலைமை முடிவெடுத்தால் கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் களமிறங்க தயாராக உள்ளதாக நானா பெட்டோலோ அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து