முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

காந்திநகர் : குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல், ஆளும் பா.ஜ.க.வுக்கு மிகுந்த சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் குஜராத்தில் ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்நிலையில், 2022 குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான  அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்துள்ளார். மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

குஜராத் சென்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநிலத்தின் நவ்ராங்ப்பூர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார்.  அதன்பின்னர் பேசிய கெஜ்ரிவால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்றார். 

குஜராத் மாநிலத்தின் பிரபல செய்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக செயல்பட்டு வந்த இஷுதன் காத்வி என்பவர் ஆம் ஆம்தி கட்சியில் இணைந்துள்ள நிலையில் அவரை 'குஜராத்தின் கெஜ்ரிவால்’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம் செய்தார்.  மேலும், டெல்லி முறையே (மாடல்) குஜராத்திலும் பின்பற்றப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கெஜ்ரிவால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவம் உள்ளது. குஜராத் மாடல் (முறை) என்பது குஜராத் மக்களால் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து