முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர ஐகோர்ட் அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பொதுமக்கள் நலன் கருதி, தொற்று பரவல் தணியும் வரை விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் பரிசோதனைக்கு உள்ளாக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

கொரோனா இரண்டாவது அலை பரவல் தடுப்புக்கான புதிதாக விதிமுறைகள் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்பட்டு உள்ளதாகவும், குறிப்பாக சீனா மற்றும் பிரிட்டன் மட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே விமான பயணத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது அலை தணிந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், கொரோனா தொற்று பரவல் தணியும் வரை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், பொது நலனை கருதி கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து