முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைக்ரோசாப்ட் நிறுவன இயக்குநர் குழு தலைவரானார் சத்யநாதெல்லா

வியாழக்கிழமை, 17 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

சான்பிரான்சிஸ்கோ : மைக்ரோசாப்ட்டின் இயக்குநர் குழு தலைவராக, அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ. சத்யநாதெல்லா நியமிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த 1975-ம் ஆண்டில் துவக்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக , இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்யநாதெல்லா(53) கடந்த 2014-ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற உடன் , கார்ப்பரேட் கட்டமைப்பை எளிமைப்படுத்தும் நோக்கத்தில், நிறுவனத்தில் 18 ஆயிரம் பணியிடங்களை நீக்கினார்.

மேலும் கிளவுட் உள்ளிட்ட பல வழிகளில் கவனத்தை மாற்றி, நிறுவனத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். லிங்க்ட் இன், நுவான்ஸ் கம்யூனிகேஷன்ஸ், உள்ளிட்ட நிறுவனங்களை கையகபடுத்துவதில் சத்யநாதெல்லாவின் பங்கு முக்கியமானது. இவரது உழைப்பு காரணமாக முயற்சியினால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கானது ஏழு மடங்கு உயர்ந்து உள்ளது. சந்தை மதிப்பும் 2 லட்சம் அமெரிக்க டாலரை நெருங்குகிறது.

இந்நிலையில், மைக்ரோசாப்ட்டின் இயக்குநர்கள் குழு தலைவராக சத்யநாதெல்லா நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 

தொழிலில் உள்ள அச்சுறுத்தல்களை கண்டுபிடித்தும், தனக்கு உள்ள புரிதல் மூலம் சரியான வாய்ப்புகளை பயன்படுத்தி, நிறுவனத்தை மிக உயரத்திற்கு எடுத்து செல்ல ஆலோசனைகளை நாதெல்லா வழங்குவார் . தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டது முதல், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சத்ய நாதெல்லா முக்கிய பங்கு வகித்து உள்ளார் என கூறப்பட்டு உள்ளது.

தற்போது , இயக்குநர்கள் குழு தலைவராக, பில்கேட்ஸ் மற்றும் ஜான் தாம்சன் ஆகியோர் பதவி வகித்து உள்ளனர். அதில், ஜான் தாம்சனுக்கு பதிலாக சத்ய நாதெல்லா நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு முன் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஸ்டீவ் பால்மருக்கு, இயக்குநர் குழு தலைவராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இயக்குநர் குழுவில், தினசரி அலுவல்கள் இயக்குநராக ஜான் தாம்சன் தொடர உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து