முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டார் சோனியா: ராகுல்காந்தி காத்திருப்பு

வியாழக்கிழமை, 17 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கொரோனா தடுப்பூசி இரண்டு  டோஸ்களும் போட்டுக் கொண்டார். ராகுல்காந்திக்கு பாசிடிவ் இருந்ததால், அவர் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.  இந்த நிலையில் இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது, 

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும் போட்டுக் கொண்டார். கடந்த மே 16-ல் தடுப்பூசி போட்டுக் கொள்ள ராகுல் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அவருக்கு கொரோனா பரிசோதனை முடிவில் பாசிடிவ் என்று வந்திருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு, மூன்று மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி போட வேண்டும் என்பது ஐ.சி.எம்.ஆரின் விதி என்பதால் ராகுல்காந்தி தடுப்பூசி போட காத்திருக்கிறார் என்றார். ராகுல்காந்தி விரைவில் தடுப்பூசி எடுத்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தடுப்பூசி எடுத்தது குறித்து தங்களின் தடுப்பூசிகளின் விவரங்களை காங்கிரஸ் தெரிவிக்குமா? என பா.ஜ.க. தலைவர்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து இந்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து