முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றுவோம்: ராகுல்

வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.  அதை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவர், தமிழகம் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

அதை தொடர்ந்து டெல்லியில் தங்கியிருந்த அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். 

சந்திப்பிற்குப் பின்னர் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி என்றும் தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து