முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தொழில்நுட்ப பல்கலை. தலைவராக தமிழர் பொறுப்பேற்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இலினொய் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழரான ராஜகோபால் ஈச்சம்பாடி அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

அமெரிக்காவில் உள்ள 131 ஆண்டுகள் பழமையானதும், உலகப் புகழ்பெற்றதுமான இந்த தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் முதல் இந்தியர்  ராஜகோபால் ஈச்சம்பாடி என்பதால், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும்  மட்டுமின்றி இந்திய துணைக்கண்டத்திற்கே உலகளாவிய பெருமையை அவர் பெற்றுத் தந்திருக்கிறார்.  

53 வயதாகும் ராஜகோபால் ஈச்சம்பாடி திருவாரூரில் பிறந்து, சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பையும், அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாகக் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரியில் தமது மேல்படிப்பையும் பயின்றவர்.

வரும் ஆகஸ்ட் 16 அன்று இலினொய் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத் தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ராஜகோபால் ஈச்சம்பாடி, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகத் தெரிவித்திருப்பது, பிறந்த மண் மீது அவர் கொண்டுள்ள மதிப்புமிகு பற்றுதலின் வெளிப்பாட்டைக் காட்டுகிறது!

தமிழர்களின் தொழில்நுட்ப அறிவின் உலகளாவிய உயரத்திற்குச் சான்றாக விளங்கும் ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு, தமிழ்நாட்டு மக்களின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து