முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் 30-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : ஆந்திரத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தை கூடுதல் தளர்வுகளுடன் வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில் ஆந்திரத்தில் மே 5-ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.  பொதுமுடக்கத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதையொட்டி, தளர்வுகள் குறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதையடுத்து, ஆலோசனைக்கு பிறகு கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திரத்தில் காலை 6 மணிமுதல் மாலை 5 வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கிழக்கு கோத்தாவரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் அந்த மாவட்டத்தில் மட்டும் கடை திறக்கும் நேரத்தை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை குறைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து