முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் 28 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம்

சனிக்கிழமை, 19 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பீஜிங் : சீனாவின் சாங்ஷா பகுதியில் 28 மணிநேரத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 10 மாடிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

வீட்டைக் கட்டிப்பார், என்பது பழமொழி அதிலிருந்தே ஒரு வீட்டைக் கட்டுவது என்பது எவ்வளவு பெரிய வேலை என்று நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. ஆனால், சீனாவின் சாங்ஷா பகுதியில் 28 மணிநேரத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 10 மாடிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.அதாவது ஒரு நாளுக்கும் கூடுதலாக சில மணி நேரங்கள் எடுத்து 10 மாடிக் கட்டடத்தை கட்டி முடித்துள்ளது பிராட் குரூப் என்ற நிறுவனம். அதனை விடியோவாக படம் பிடித்து யூடியூப்பிலும் பதிவிட்டுள்ளது.

இதில் எந்த மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை. அதாவது, சுவர்கள், ஜன்னல்கள், கதவுகளை தனித்தனியாக உருவாக்கி, அலமாரிகள், சமையல் கூடங்களையும் அதற்கான தொழிற்சாலைகளில் தயாரித்து தயாராக வைத்துக் கொண்டு, இந்தக் கட்டுமானம் தொடங்கியுள்ளது. கட்டுமானப் பணிகள் தொடங்கியதும், சுவர்கள், ஜன்னல்கள், அலமாரிகளை ஒன்றன் அருகே ஒன்று வைத்து, நட்டு, போல்டுகளைக் கொண்டு இறுக்கி, ஒவ்வொரு மாடியையும் முடித்து, பிறகு ஒன்றன் மேல் ஒன்றாக கட்டுமானங்களை மிகச் சரியாக அடுக்கி அதனை இணைத்துவிட்டு, கட்டுமானம் முழுமையாக முடிந்ததும், அந்தக் கட்டடத்துக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் உதவியோடு, சீனாவின் சாங்ஷா நகரில் கட்டப்பட்டிருக்கும் இந்த 10 மாடிக் கட்டடத்தை பிராட் குரூப் நிறுவனம் 28 மணி நேரம் 45 நிமிடத்தில் கட்டி முடித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.இந்தக் கட்டடத்தைக் கட்டும் 4 நிமிட விடியோவை அந்த நிறுவனமே யூடியூப்பிலும் பதிவேற்றம் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து