முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டு பாடத் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 19 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்  பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கி,  கல்வித் தொலைக்காட்சியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணமாக, அம்மாணவர்களுக்கு அரசு, பாடநூல்களை வழங்கி வருகிறது. 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக  நடைபெற்று வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாட நூல்களை வழங்கியும், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளி செல்ல இயலாமல் இருக்கும் மாணவர்கள்,  வீட்டில்  இருந்தபடியே கல்வி பயில ஏதுவாக 1 முதல் 12 வரை அனைத்து வகுப்புகளுக்கும் உரிய அனைத்து பாடங்களுக்குமான  கல்வித்  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.  இத்திட்டம் சுமார் 292 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது.  இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 69 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவர். 

அதனைத் தொடர்ந்து, அம்மாணவ, மாணவியர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின்  நலம் விசாரித்து, அவர்களுக்கு பேனா மற்றும் சாக்லேட்டுகளை வழங்கி கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து