முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி

சனிக்கிழமை, 19 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

கடந்த 2016-ம் ஆண்டு மே மாதத்தில் நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஆண்டுதோறும் அவர் அமெரிக்காவில் அதே மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதால் ரஜினி அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார்.  அதன்படி, நேற்று அதிகாலை ரஜினி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். சென்னையிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ் மூலமாக தோஹா சென்று, அங்கிருந்து வேறொரு விமானம் மூலமாக அமெரிக்கா செல்கிறார். அவருடன் அவர் மனைவி லதா ரஜினிகாந்த்தும் உடன் செல்கிறார். அங்கு ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக் மருத்துவமனையில் ரஜினிகாந்த்துக்கு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. 

தி கிரே மேன் படப்பிடிப்புக்காக ஏற்கெனவே அமெரிக்கா சென்றுள்ள தனுஷ், கரோனா பரவல் காரணமாக அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையில், அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்துடன் அவருடைய மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ், பேரன்கள் இணைந்துகொள்ள உள்ளனர். பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கியிருந்து பின்னர் ரஜினியுடன், அவர்கள் அனைவரும் சென்னை திரும்ப உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து