முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது

சனிக்கிழமை, 19 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாடாளுமன்றத்தின் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை  கூடுகிறது. 

தற்போது கொரோனாவின் பிடியில் நாடு இருந்தாலும் நாட்டின் பொருளாதாரம் மிக முக்கியம் என்பதால் 2021-ம் ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி கூடியது. இதில் ஜனவரி 29-ம் தேதி ஜனாதிபதி உரையுடன் துவங்கிய முதல் பகுதிக்கான கூட்டம் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் மார்ச் 8-ம் தேதி இரண்டாம் பகுதிக்கான கூட்டம் தொடங்கியது.

இருப்பினும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு இடையே, டெல்லி ஆளுனருக்கான அதிகாரம், காப்பீட்டு துறையில் 74 சதவீத அந்நிய நேரடி முதலீடு உள்ளிட்ட மசோதக்கள் நிறைவேற்பட்டு குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே, அதாவது மார்ச் 25-ம் தேதியே நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலையில் தனிமனித பொருளாதாரத்தில் தொடங்கி நாட்டின் பொருளாதாரம் வரை தற்போது பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் நடப்பாண்டின் மழைக்கால கூட்டம் ஜூலை 21-ம் தேதி முதல் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, கூட்டம் எத்தனை நாள் நடத்துவது? என்பது குறித்து எல்லாம் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் மக்களவை, மாநிலங்களவை தலைவர்கள் ஜூலை முதல் வாரத்தில் ஆலோசனை மேற்கொள்வார்கள். இதில் மழைக்கால கூட்டத் தொடரை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க நாளை  கூடுகிறது நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம். இதைத்தொடர்ந்து மழைகால கூட்டத்தொடர் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து