முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கு விதிகளை தளர்த்தும் போதும் கட்டுப்பாடுகள் கடைபிடிப்பு அவசியம் : மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 19 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஊரடங்கு விதிகளை தளர்த்தும்போது கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு விதிகளை மாநில அரசுகள் படிப்படியாக தளர்த்தி வருகின்றன. இந்த சூழலில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மாநிலங்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், கட்டுப்பாடு விதிப்பது அல்லது தளர்த்துவது உள்ளிட்ட எந்த நடவாடிக்கையாக இருந்தாலும் அங்குள்ள சூழலைப் பொறுத்து உரிய ஆய்வுக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

கொரோனா முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் போது பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தியவுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மக்கள் சந்தைகளில் கூட ஆரம்பித்து விட்டனர் என்றும் தற்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவதில் சுணக்கம் காட்டக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து