முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஆந்திராவில் புது சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

அமராவதி : ஆந்திராவில் நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில், பிற்பகல் 2 மணி வரை 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

ஆந்திராவில் கோவிட் தடுப்பூசி பணியை வேகப்படுத்துவதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நேற்று மெகா தடுப்பூசி முகாமிற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக மாநிலத்தின் 13 மாவட்டங்களில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 5 வயது குழந்தை உடைய தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

காலை 6 மணிக்கு துவங்கிய இந்த முகாமில் பிற்பகல் 2 மணி வரை 9,02,308 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிற்பகல் 2 மணி நிலவரப்படி. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 1.11 லட்சம் பேருக்கும் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 1.08 லட்சம் பேருக்கும் கிருஷ்ணா மாவட்டத்தில் 93,213 பேருக்கும் விசாகப்பட்டினத்தில் 84,461 பேருக்கும் ஸ்ரீகாகுளத்தில் 68,824 பேருக்கும் சித்தூரில் 58,750 பேருக்கும்,கர்னூல் மாவட்டத்தில்51,650 பேருக்கும் ஆனந்தபுரமுவில் 47,502 பேருக்கும் கடப்பாவில் 42,619 பேருக்கும் விஜயநகரத்தில் 41,643 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இதன் மூலம் மாநிலத்தில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது. 1,06,91,200 பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டு உள்ளது. இதனையடுத்து முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 1,33,93,359 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த ஏப்.14ல் ஒரே நாளில் 6,28,961 பேருக்கு ஆந்திராவில் தடுப்பூசி போடப்படடது. இதுவே தேசிய அளவில் சாதனையாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து