முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 98.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 92.58 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. 

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல், லிட்டர் 98.14 ரூபாய், டீசல் லிட்டர் 92.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து லிட்டர் 98.40 ரூபாய்க்கும் , டீசல் விலை 27 காசுகள் அதிகரித்து லிட்டர் டீசல் 92.58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து