முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த டைனோசர்களின் காலடி தடம்

திங்கட்கிழமை, 21 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரில் ஃபோல்க்ஸ்டோன் பகுதியில் மலை குன்றுகள் மற்றும் கடற்கரை முகப்பு பகுதிகளில் டைனோசர்களின் காலடி தடங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். 

இதுபற்றி டைனோசர்கள் பற்றிய ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் டேவிட் மார்டில் கூறும்பொழுது, இந்த பகுதியில் டைனோசர்களின் காலடி தடம் கண்டறியப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை. 

அவை முற்றிலும் அழிந்து போவதற்கு முன் கடைசியாக இந்த நாட்டில் உலா வந்திருக்க கூடும். அவை நெருங்கியபடி நடந்து சென்றுள்ளன. 10 கோடி ஆண்டுகளுக்கு முன் கிரெட்டேசியஸ் காலத்தின் முடிவு பகுதியில் தெற்கு இங்கிலாந்தில் பல்வேறு வகையான டைனோசர்கள் இருந்துள்ளன என அவற்றின் காலடி தடங்கள் காட்டுகின்றன. 

அவற்றில் ஆங்கைலோசர்கள் எனப்படும் கவச உடை போன்ற தோற்றம் கொண்ட டைனோசர்கள், டைரன்னோசரஸ் ரெக்ஸ் போன்ற அசைவ உண்ணிகளான 3 விரல்களை கொண்ட டைனோசர்கள், பறவைகளின் வடிவம் கொண்ட சைவ உண்ணிகளான டைனோசர்கள் ஆகியவை இருக்க கூடும். 

ஒரு சில காலடி தடங்கள், யானையின் காலடி தடம் அளவுக்கு ஒத்து போகிறது. அவை ஆர்னித்தோபோடிக்னஸ் வகையை சார்ந்த ஒன்றாக இருக்கலாம் என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளது. எனினும், சிறிய வகை காலடி தடங்களும் இதே காலகட்டத்தில் சீனாவில் கண்டறியப்பட்டு உள்ளது. 

இதுதவிர, 10 மீட்டர் உயரம் கொண்ட, 2 கால்களால் அல்லது 4 கால்களாலும் நடக்க கூடிய சைவ உண்ணிகளான இகுவானோடன்கள் போன்ற டைனோசர்களின் காலடி தடமும் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அது 80 செ.மீ. அகலம் மற்றும் 65 செ.மீ. நீளம் கொண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

ஒரே இடத்தில் இத்தனை வகை காலடி தடங்கள் கண்டறியப்பட்டு இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. உணவு அல்லது புலம்பெயர்தலுக்காக இந்த வழிகளை தேர்வு செய்து அவை சென்றிருக்க கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து