முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது - எடப்பாடி பழனிசாமி கேள்வி

திங்கட்கிழமை, 21 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது என்று தி.மு.க. அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் கவர்னர் உரையாற்றினார். 

இந்நிலையில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

கவர்னர் உரையில் முன்னோடி திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது 505 அறிவிப்புகளை தி.மு.க. வெளியிட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்படும் என்றனர். அதில் முக்கியமான வாக்குறுதிகள் கூட கவர்னர் உரையில் இல்லை. 

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் நேரத்தில் தி.மு.க. கூறியது, தற்போது நீட் தேர்வு குறித்து ஆராய குழு அமைத்துள்ளனர். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள், தற்போது மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என கூறுகிறார்கள். 

கூட்டுறவு வங்கிகளில் ரத்து செய்யப்பட்ட கடன்களுக்கு ரசீது வழங்கப்படவில்லை. வேளாண் பணிகளில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தி.மு.க. கூறியது, கல்விக்கடன் தொடர்பாக கவர்னர் உரையில் எதுவும் இடம்பெறவில்லை. 

பெட்ரோல், டீசல் விலை குரைக்கப்படும் என தேர்தல் நேரத்தில் தி.மு.க. கூறியது, பெட்ரோல், டீசல் தொடர்பாக கவர்னர் உரையில் எதுவும் இடம்பெறவில்லை. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை. கொரோனா பரவலை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் மறைக்கப்படுகின்றன. 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து