முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு பா.ஜ.க. பிரமுகர் அடைக்கலம் அளித்தாரா

திங்கட்கிழமை, 21 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்றவர். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். 

அந்த புகார் மனுவில், ‘மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு கொண்டார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்’ என்று தெரிவித்து இருந்தார். எனது அந்தரங்க ஆபாச புகைப்படங்களை வெளியிடுவேன், என்று பயமுறுத்துவதாகவும், புகாரில் குற்றம் சாட்டி இருந்தார். 

இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் மீது கற்பழிப்பு உள்பட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்தநிலையில் மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து மணிகண்டனை கைது செய்ய 4 தனிப்படைகள் களத்தில் இறக்கப்பட்டனர். அவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. அதன் பேரில் பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் அவரை கைது செய்தனர். பின்னர் போலீஸ் வாகனம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். 

இதற்கிடையில் மணிகண்டன் சைதாப்பேட்டை 17-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 2-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் அவர் சைதாப்பேட்டை ஜெயிலில் அடை க்கப்பட்டார். 

இந்த நிலையில், பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு பா.ஜ.க. பிரமுகர் அடைக்கலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தலைமறைவாக இருந்த போது பா.ஜ.க.வின் தென்மாவட்ட முக்கிய பிரமுகர் ஒருவர் தன் வீட்டில் தங்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளன. அந்த பிரமுகரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து