முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவலர் தாக்கியதில் வாலிபர் பலி: தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

புதன்கிழமை, 23 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சேலத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு முருகேசன் என்பவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது, தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய மு.க ஸ்டாலின், என் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன் எனவும் கூறினார். 

கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகேசன் என்பவர் தருமபுரிக்கு மது வாங்க சென்று விட்டு திரும்பிய போது ஏத்தாப்பூர் அருகே சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முருகேசனை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர் பின்னர் ஒரு கட்டத்தில் லத்தியால் அவரை அடித்துள்ளனர். 

இதனால் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, முருகேசனின் உயிரிழப்புக்கு காரணமான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டார். 

அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.அவரிடம் விசாரணை நடத்திய சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது, தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய மு.க ஸ்டாலின், என் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன் எனவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து