முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாணு வெளியிட்ட சாயம் பஸ்ட் லுக்

சனிக்கிழமை, 26 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.  அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தில், எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். 

நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை  தயாரிப்பாளர் தாணு, இயக்குனர்கள் அமீர்,  சுசீந்திரன்,  சமுத்திரக்கனி, ராஜேஷ்,   சுப்ரமணிய சிவா, எஸ் ஆர் பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டனர்.

மேலும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை  அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சாயம் படக்குழுவினர் சந்தித்து  வாழ்த்துப் பெற்றனர். தற்போது போஸ்ட புரொடக்சன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. தற்போதைய நிலைமை சீராவதை பொறுத்து படம்  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து