முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்தது புதிதாக 45,892 பேருக்கு தொற்று

வியாழக்கிழமை, 8 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து புதிதாக 45,892 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 9 ஆயிரத்து 557 அதிகரித்து உள்ளது.  கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 817 பேர் உயிரிழந்துள்ளனர்.

 இது நேற்று முன்தினத்துடன் (930) ஒப்பிடும்போது சற்று குறைவாகும்.  இதனால், கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 44,291 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதனால் மொத்த குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 43 ஆயிரத்து 825 ஆக உயர்ந்து உள்ளது.  கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 704 ஆக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து