முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் சாலை விபத்துகள் 50 சதவீதம் குறைந்துள்ளது மத்திய அமைச்சர் கட்காரி பாராட்டு

வியாழக்கிழமை, 8 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: தமிழகத்தில் சாலை விபத்துகள் 50 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதற்கு மத்திய அமைச்சர் கட்காரி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் சாலை விபத்துகளையும், சாலை மரணங்களையும் 50 சதவீதம் குறைத்து இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பாராட்டு தெரிவித்து உள்ளார்.  அவர், சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து காணொலி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் போது, 

வருகிற 2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையையும், மரணத்தையும் பாதியாக குறைக்க இலக்கு வைத்துள்ளோம்.  வருகிற 2030-ம் ஆண்டுக்குள் சாலை விபத்துகள் இல்லாத சூழலை உருவாக்குவதே இறுதி இலக்கு ஆகும்.  கடந்த ஆண்டு சுவீடனில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பங்கேற்றோம். அப்போது, வருகிற 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை விபத்துகள் இல்லாத சூழலை உருவாக்குவோம் என உறுதியளித்துள்ளோம் என கூறினார். 

விரைவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை, மரணத்தை 50 சதவீதம் குறைத்து விடுவோம். அதனை நிறைவேற்றுவோம்.  நாங்கள் வகுத்த இந்த இலக்கை தற்போது வெற்றிகரமாக தமிழகம் மட்டும் அடைந்து விட்டது. அந்த மாநிலத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 53 சதவீதம் குறைந்துள்ளது.  அதற்காக எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து