முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி வரும் 13 - ம் தேதி கலந்துரையாடல்

வெள்ளிக்கிழமை, 9 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர்.

120க்கும் மேல்...

மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

18 விளையாட்டு...

வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச் சண்டை, குதிரையேற்றம், வாள்வீச்சு, கோல்ப், ஜிம்னாஸ்டிக், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மரப் படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 18 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.

கலந்துரையாடல்...

 

இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள்- வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி 13-ம் தேதி கலந்துரையாடுகிறார். அன்று மாலை 5 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும் கலந்துரையாடலில் வீரர்கள்- வீராங்கனைகளுடன் மோடி பேசுகிறார். அப்போது அவர்களை ஊக்கப்படுத்த உள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வீரர்கள் - வீராங்கனைகளுக்கு வாழ்த்தும், ஆதரவும் தெரிவிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து