முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்நாத்சிங்குக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

சனிக்கிழமை, 10 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: பிறந்த நாளையொட்டி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது 70-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  பிரதமர் நரேந்திர மோடி ராஜ்நாத்சிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எங்களது அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அன்பான ஆளுமை மற்றும் ஞானத்திற்காக அவர் நாடு முழுவதும் போற்றப்படுகிறார். அவர் ஒரு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகி. நமது தேசத்தின் சேவைக்காக, அவரது நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து