முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சந்திப்பு

சனிக்கிழமை, 10 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள புஷ்கர் சிங் தாமி பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் சந்தித்தார்

உத்தரகாண்ட் மாநில முதல்வராக  இருந்த தீரத்சிங் ராவத் பதவியேற்று ஆறு மாதத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாக முடியாத சூழல் ஏற்பட்டதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.   இதையடுத்து, டேராடூனில் கடந்த 3-ம் தேதி நடந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பா.ஜ.க. சட்டமன்றக் கட்சித் தலைவராகவும், புதிய முதல்வராகவும் புஷ்கர் சிங் தாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி கடந்த 4-ம் தேதி பதவியேற்றார். அவருக்கு உத்தரகாண்ட் மாநில கவர்னர் பேபி ராணி மௌரியா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வர் புஷ்கர் சிங் தாமியை தொடர்ந்து, புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது. 

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள புஷ்கர் சிங் தாமி பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து