முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு: பா.ஜ. - சமாஜ்வாடி இடையே மோதல்

சனிக்கிழமை, 10 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவின் போது பா.ஜ.க. மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

உத்தரபிரதேசத்தில் 825 இடங்களுக்கான பிளாக் பஞ்சாயத்து தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று  நடைபெற்றது. 825 இடங்களில் போட்டியிட 1778 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.  இதில் 68 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 187 பேர் தங்கள்  மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். மேலும், எதிர்த்து யாரும் போட்டியிடாததால் 349 பேர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

எஞ்சிய 476 பிளாக் பஞ்சாயத்துகளின் தலைவர்களை தேர்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ், பா.ஜ.க, சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் ஹமீர்பூரில் உள்ள சுமீர்பூர் பகுதியில் வாக்குப்பதிவு நிலையம் அருகே பா.ஜ.க. மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் இடையே நேற்று திடீரென மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்குதல் நடத்தினர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலையை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான மனுதாக்கலின் போது 13 இடங்களில் வன்முறை நடைபெற்றது. கடந்த வியாழன்று சமாஜ்வாடி கட்சி பெண் தொண்டர் ஒருவரை சேலை இழுத்து மானபங்கப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து