முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி, வியட்நாம் பிரதமருடன் உரையாடல்

சனிக்கிழமை, 10 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, வியட்நாம் பிரதமர் பாம் மின் சின்ஹ் உடன் தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார். 

வியட்நாம் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள பாம் மின் சின்ஹ்க்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அவரது திறமையான வழிகாட்டுதலின் கீழ் இந்திய - வியட்நாம் விரிவான கேந்திர கூட்டணி மேலும் தொடர்ந்து வலுப்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திறந்த, உள்ளடக்கிய அமைதியான, விதிகளின் அடிப்படையிலான இந்தியப் பெருங்கடல் பகுதி குறித்த தொலைநோக்குப் பார்வையை இரு நாடுகளும் பகிர்ந்து வருவதால், பிராந்திய நிலைத்தன்மை, வளம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இந்திய- வியட்நாம் விரிவான கேந்திர கூட்டணி பங்களிக்கக் கூடும் என்பதால் அதனை பிரதமர் மோடி வரவேற்றார்.

 

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் இந்தியாவும், வியட்நாமும் தற்போது உறுப்பு நாடுகளாக செயல்படுவதையும் பிரதமர் குறிப்பிட்டார்.  கோவிட் -19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் போது இந்தியாவிற்கு விலைமதிப்பில்லா ஆதரவளித்த அந்நாட்டு அரசு மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் சின்ஹிடம், மோடி தெரிவித்தார்.

பெருந்தொற்றுக்கு எதிராக இரு நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்பை இரண்டு நாடுகளும் தொடர்ந்து வழங்க தலைவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.  இருதரப்பு உறவுகள் பற்றி ஆய்வு மேற்கொண்ட இருவரும், வெவ்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்த தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். இருநாட்டு தூதரக உறவின் பொன் விழா, 2022-ம் ஆண்டு கொண்டாடப்படவிருப்பதைக் குறிப்பிட்டு, பல்வேறு நினைவுகள் சார்ந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக இந்த மைல்கல் நிகழ்வைக் கொண்டாட அவர்கள் ஒப்புக்கொண்டனர்.  விரைவில், பொருத்தமான தேதியில் இந்தியாவிற்கு அரசுமுறை பயணமாக வருமாறு பிரதமர் சின்ஹிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து