முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா காலத்தில் கன்வர் யாத்திரை ஏன்? உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதன்கிழமை, 14 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: கன்வர் யாத்திரை வரும் 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை நடைபெற இருக்கிறது. உத்தர பிரதேசம், அரியானா, பஞ்சாப், டெல்லி, இமாச்சல பிரதேசத்தில் இருந்து யாத்ரீகர்கள் ஹரித்வார் செல்வார்கள். உத்தரகாண்ட் அரசு கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை எச்சரிக்கை காரணத்தால், கன்வர் யாத்திரையை ரத்து செய்துள்ளது. கடவுள் கூட மக்கள் இறப்பதை விரும்ப மாட்டார். நாங்கள் இதுகுறித்து அதிகாரிகள், அருகில் உள்ள மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அதன் பின் ஹரித்வார் கொரோனா தொற்றின் மையமாகி விடக் கூடாது என்பதால் கன்வர் யாத்திரை ரத்து என்ற முடிவை எடுத்துள்ளோம் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தமி தெரிவித்துள்ளார். 

ஆனால் உத்தர பிரதசே மாநில அரசு கன்வர் யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் குறிப்பிட்ட நபர்களுடன் வரும் 25-ல் இருந்து கன்வர் யாத்திரை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.  மேலும், கொரோனா நெறிமுறையை முழுமையாக பின்பற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும். கன்வர் யாத்திரையின் பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான செயல்பாடு குறித்து எந்த தயக்கமும் இருக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.  தேவைப்பட்டால் யாத்ரீகர்களுக்கு ஆர்-பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் தேவை என்பது கட்டாயமாக்கப்படலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. உத்தர பிரதேச மாநில அரசுக்கு, அனுமதி கொடுத்தது குறித்து பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து