முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரதட்சணை கொடுமைக்கு எதிராக கேரள கவர்னர் உண்ணாவிரதம்

புதன்கிழமை, 14 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம்: வரதட்சணை கொடுமைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். 

கேரள மாநிலத்தில் சமீப காலமாக வரதட்சணை கொடுமையால்   ஏராளமான பெண்கள் உயிரிழந்து வருகின்றனர். வரதட்சணை கொடுமை கேரள மாநிலத்தில் தற்போது அதிக அளவில் நடைபெறுவதால் அதற்க்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர்.  இந்த நிலையில் பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிராக காந்திய அமைப்பு சார்பில் கேரளா மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  இதில் பலரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்பை தெரிவித்து வருகினறனர்.

இந்த நிலையில், நேற்று தனது உண்ணாவிரத போராட்டத்தை காந்திய அமைப்பினருடன் சேர்ந்து கவர்னர்  மாளிகையில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். ஆரிப் முகமது கான். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில், பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து