முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

புதன்கிழமை, 14 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஓர் ஆண்டுக்குப்பின் நேற்று மீண்டும் நேரடியாக கூடியது. இதில் பாராளுமன்ற மழைகாலக் கூட்டத் தொடர் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் அனைத்தும் காணொலி வாயிலாகவே நடந்து வந்தன. கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் நேரடியாகப் பங்கேற்றனர். அதன்பின் ஒவ்வொரு வாரமும் அமைச்சரவை கூட்டம் காணொலி வாயிலாகவே நடந்தப்பட்டு, முக்கிய விவகாரங்களும், முடிவுகளும் காணொலி வாயிலாகவே எடுக்கப்பட்டன.

இந்த நிலையில் மத்திய அமைச்சரவை அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது. புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். ஏராளமான அமைச்சர்கள் புதியவர்கள் என்பதால் மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்து அறிவுரை வழங்கவும் நேரடியாக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. ஓராண்டு இடைவெளிக்குப்பின் மத்திய அமைச்சரவை நேரடியாக பிரதமர் மோடி இல்லத்தில் நேற்று காலை கூடியது.  இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

வரும் 19-ம் தேதி முதல் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும், எழுப்பும் விவகாரங்களுக்கும் பதில் அளிப்பது, அவர்களை சமாளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.  ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கும் ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து