முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

புதன்கிழமை, 14 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்ததார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றால் இன்று மற்றும்  நாளை  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கு வங்கக்கடல் பகுதிக்கான எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது. அரபிக்கடல் பகுதிகளான கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் மற்றும் வட கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்  18-ம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து