முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறலா? இந்திய ராணுவம் மறுப்பு

புதன்கிழமை, 14 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: கிழக்கு லடாக்கில் சீனா ராணுவம் அத்துமீறியதாக பரவி வரும் செய்தி உண்மையல்ல என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிழக்கு லடாக் பகுதியில் மோதல் குறித்து வெளியாகும் செய்திகள் பொய்யானவை,ஆதாரமற்றவை. சீனா ராணுவம் அத்துமீறியதாக கூறப்படும் செய்தி உண்மையானதல்ல. சர்ச்சைக்குரிய பகுதியை தாண்டி இந்திய ராணுவமும் அந்த பகுதியில் செல்லவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய-சீனா ராணுவம் எல்லை மீறவில்லை. எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சினைக்கான தீர்வை பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் எனத் தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து