முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் சாதனை

வியாழக்கிழமை, 15 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் சாதனை செய்து உள்ளனர்.

ராஜஸ்தான் பொது சேவை ஆணையம் (ஆர்.பி.எஸ்.சி) ராஜஸ்தான் நிர்வாக சேவை (ஆர்.ஏ.எஸ்) 2018 தேர்வு இறுதி முடிவை  வெளியிட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல்கள் நடத்தப்பட்ட பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. தகுதி பட்டியல் அதிகாரப்பூர்வ (rpsc.rajasthan.gov.in)  இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தேர்வில் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த முக்தா ராவ் முதலிடத்தையும், டோங்கைச் சேர்ந்த மன்மோகன் சர்மா இரண்டாம் இடத்தையும், ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிவாட்சி கண்டால் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மொத்தம்  2023 பேர் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர், அவர்கள் இப்போது மாநிலத்தின் பல்வேறு துறைகளில் நியமிக்கப்படுவார்கள்.  முதலிடம் பிடித்தவர்களுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்த தேர்வில் ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீ சஹ்தேவ் சஹாரனின் மூன்று மகள்கள் வெற்றி பெற்று உள்ளனர்.  ஸ்ரீ சஹ்தேவ் சஹாரனுக்கு 5 மகள்கள்.  அதில் ஏற்கனவே ரோமா மற்றும் மஞ்சு ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் வெற்றி பெற்று பணியில் உள்ளனர். தற்போது மற்ற அன்ஷு, ரீது மற்றும் சுமன்  3 மகள்களும் இதே தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர். 

இதுகுறித்து பர்வீன் கஸ்வான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

இது  ஒரு நல்ல செய்தி. அன்ஷு, ரீது மற்றும் சுமன் ஆகியோர் ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரிகள். தற்போது மூவரும் ஒன்றாக ஆர்.ஏ.எஸ். இல் தேர்வு செய்யப்பட்டனர். விவசாயி ஸ்ரீ சஹ்தேவ் சஹாரனின் மகள்கள் இப்போது ஆர்.ஏ.எஸ். அதிகாரிகள் என்று  டுவீட் செய்துள்ளார். இந்த சகோதரிகளுக்கு பலரும் தங்களது  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து