முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

வெள்ளிக்கிழமை, 16 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக நேற்று திறக்கப்பட்டது. இன்று முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

கொரோனா  ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த சபரிமலை அய்யப்பன் கோவில்  நடை மாதாந்திர பூஜைகளுக்காக நேற்று திறக்கப்பட்டது. சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின் இன்று முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளது.

கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்ததை தொடா்ந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு  பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆடி மாதப் பிறப்பையொட்டி நேற்று சந்நிதானம் நடை திறக்க முடிவு செய்யப்பட்டது. இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை 5 நாள்களுக்கு கோவிலுக்கு வர பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினசரி 5,000 பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். அவா்கள் முன்கூட்டியே இணையதளத்தில்  முன்பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தா்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கோவிலுக்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ஆா்.டி.பி.சி.ஆா். கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டு, தங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து