முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது அணை விவகாரம்: துரைமுருகன் தலைமையில் சர்வ கட்சி குழு மத்திய அமைச்சருடன் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 16 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: கர்நாடக அரசு கட்டும் மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் டெல்லி சென்ற அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.  சமீபத்தில் தமிழக முதல்வர், பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணைப் பிரச்சினை குறித்து தமிழகத்தின் நிலைப்பாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், சமீபத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரினார்.

மேகதாது அணை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனக் கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதிய போது அணை அமைந்திட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என தமிழக முதல்வர் பதில் கடிதம் அனுப்பினார்.  மேகதாது அணைப் பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க, தமிழகத்திலுள்ள சட்டமன்ற அனைத்துக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் கூட்டினார்.  இந்தக் கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி புறப்பட்டுச் சென்றது.  இந்தக்குழுவில் காவிரி விவகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.  இந்தக்குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திப்பதற்கு முன் தனியாக துரைமுருகன் தலைமையில் ஆலோசனை நடத்தியது. பின்னர் அனைவரும் மத்திய அமைச்சரை சந்தித்து பேசினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து