முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த 100 நாட்கள் முக்கியமானவை: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

சனிக்கிழமை, 17 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த 100 முதல் 125 நாட்கள் மிகவும் முக்கியமானவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா நிலவரம் தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறுகையில், 

கொரோனா தொற்று பரவல் குறையும் விகிதம் மெல்ல மெல்ல சரிந்து வருகிறது. இது எச்சரிக்கை மணி. அடுத்த 100 முதல் 125 நாட்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கிய காலகட்டம்.  ஐ.சி.எம்.ஆர். ஆய்வின்படி இரண்டு டோஸ் தடுப்பூசி 95 சதவீதம் கொரோனா மரணங்களை தவிர்த்துள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி இறப்பு அபாயத்தை 82 சதவீதம் வரை குறைத்துள்ளது.

எனவே, ஜூலை மாதத்துக்குள் 50 கோடி தடுப்பூசி என்ற இலக்குடன் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அதை நெருங்கும் நிலையில் இருக்கிறோம். அரசாங்கம் 66 கோடி கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு விண்ணபித்துள்ளது. அது தவிர தனியார் மருத்துவமனைகளுக்கு 22 கோடி தடுப்பூசிகள் வழங்கப்படும். மூன்றாவது அலை ஏற்படக் கூடாது என்று பிரதமர் எங்களுக்கு பணித்துள்ளார் என்றார்.

மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், முகக்கவசம் பயன்படுத்துதல் வெகுவாகக் குறைந்துள்ளது. பல்வேறு தளர்வுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் முகக்கவசம் அணிவதை நம் வாழ்வின் புதிய இயல்பாக நாம் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து