முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லை பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பு: அமித்ஷா

சனிக்கிழமை, 17 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: எல்லை பாதுகாப்பு என்பது தேசியபாதுகாப்பு என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.

எல்லை பாதுகாப்பு படையின் வருடாந்திர விருது வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு வீர மரணமடைந்தவர்களுக்கும், பணியில் வீரதீர செயல்களை புரிந்தவர்களுக்கும் விருதுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:- 

உயர்ந்த தியாகத்தை செய்தவர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். உலக வரைபடத்தில், இந்தியா தனது நிலையை பலப்படுத்தி கொண்டு வருகிறது. இந்த துணிச்சலான நெஞ்சம் கொண்டவர்களையும், போர் வீரர்களையும் நம்மால் மறந்து விட முடியாது. எல்லை பாதுகாப்பு படை மற்றும் எல்லைகளை பாதுகாக்கும் நமது துணை ராணுவப்படைகள் ஆகியவற்றால் உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்கிறது.

தற்போது வங்கதேசம் சுதுந்திர தேசமாக உள்ளதில், எல்லை பாதுகாப்பு படை முக்கிய பங்காற்றியது. நீண்ட காலமாக சில முன்னுரிமைகள் காரணமாக எல்லை பாதுகாப்பு குறித்து எந்த விவாதங்களும் எழவில்லை. மத்தியில் வாஜ்பாய் அரசு அமைந்த போது எல்லை பிரச்னை தீவிரமாக எடுத்து கொள்ளப்பட்டது.

எல்லை பாதுகாப்பு என்பது தேசியபாதுகாப்பு. நமக்கு பல சவால்கள் உள்ளன. ஆனால், நமது துணை ராணுவப்படைகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பிரதமர் மோடியின் கீழ் நம்மிடம் சுதந்திரமான பாதுகாப்பு கொள்கை உள்ளது. நாட்டிற்கு தனி பாதுகாப்பு கொள்கையை தந்தவர் பிரதமர் மோடி. இந்தியாவின் இறையாண்மைக்கும், எல்லைக்கும் யாரும் சவால் விட முடியாது. இறையாண்மைக்கு சவால் விடுத்தவர்களின் மொழியிலேயே அவர்களுக்கு பதிலளிக்கப்பட்டது.

2014-ம் ஆண்டில் மோடி பதவியேற்பதற்கு முன்னர் பாதுகாப்புக்கு என தனிக்கொள்கை இல்லை. வெளியுறவு கொள்கையோடு சேர்ந்ததாக பாதுகாப்பு துறை இருந்தது. அதை மாற்றிய மோடி, பாதுகாப்புக்கு எனதனிக்கொள்கையை உருவாக்கினார்.  பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுக்களை முறியடிக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக் நுட்பங்களை தயார் செய்ய வேண்டும். எல்லைக்கு அப்பால் இருந்து தாக்குதல்களுக்கு டுரோன்களை பயன்படுத்தப்படும் விவகாரத்தையும் தாண்டி இது முக்கியமானது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து