முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தியேட்டர்களை திறக்க கர்நாடக அரசு அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு: கர்நாடகாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பொது முடக்க தளர்வுகள் அறிவிப்பு தொடர்பாக முதல்வர் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  மேலும் வரும் 26-ம் தேதி முதல் உயர்கல்வி நிறுவனங்களைத் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது போட்டுக் கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்படவுள்ளனர். இதுதவிர இரவு நேரத்துக்கான ஊரடங்கு 9 மணிக்கு பதில் 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து