Supreme-Court 2021 07

Source: provided

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  

தமிழகத்தின் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த காரணத்தினால், அப்போதைய அ.தி.மு.க. அரசு, அரசு பள்ளி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு கவர்னரும் ஒப்புதல் வழங்கி, கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இதே போல், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இந்த சூழலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத  இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டையை சேர்ந்த ராஜஸ்ரீ என்ற பள்ளி மாணவி சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.  இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர். மேலும் மாணவி ராஜ்ஸ்ரீ ஐகோர்ட்டில் இது தொடர்பாக முறையீடு செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தி, வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.


அமெரிக்கா - ரஷ்யா இடையே நடக்கும் Cyber War | Ransomware Cyber Attack



YAMAHA RX100 Styleல் அசத்தலான எலக்ட்ரிக் பைக்|5 ரூபாய்க்கு 100 கிலோமீட்டர்| Komaki MX3 E-Bike Review



தாய் பால் கொடுப்பதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க முடியுமா? | Benefits of Mothers Milk



ஒரு பைசா செலவில்லாமல் ஓடும் மோட்டார் சைக்கிளை தயாரித்த மாணவர்



தேனீ வளர்க்க கற்று கொடுத்து 80 பேரை லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வைத்து அசத்தல்



எனக்குEmotional Scenesல் நடிக்க ரெம்ப பிடிக்கும் சீமராஜா பட நடிகை அபிநயா | Seema Raja Actress Abhinaya



இள வயதிலேயே இந்தியன் சாம்பியன் டைட்டில் வென்ற கோம்பை நாய் |பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 18



Whatsapp Call மூலம் பெண்களை மயக்கி பணம் கேட்டு மிரட்டல்| மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? இதை அவசியம் சாப்பிடுங்க | K.தம்பிதுரை சித்த மருத்துவர்



22 கின்னஸ் சாதனைகளை படைத்து அசத்திய தமிழர் | 22 Guinness World Records Title Winner



Kanni | வளர்த்தவர் இருந்தால் மட்டுமே குட்டி போடும் பாசமான நாய்| பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 17



Tamil General Knowledge Questions and Answers|Brain Games Tamil|Tamil quiz | Interesting GK| Part 01



பிச்சை எடுத்து 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தானம் செய்த பிச்சைக்காரர் |Beggar Donates 50 Lakh Rupees



வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி? | Job Scams


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து