Priyanka 2021 07 21

Source: provided

புதுடெல்லி : கொரோனா பெருந்தொற்று 2-வது அலையின்போது, ஆக்சிஜன் ஏற்றுமதியை 700 சதவீதம் அதிகரித்தது மத்திய அரசு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த மாநிலத்திலும் யாரும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்ததற்கு பிரியங்கா காந்தி பதில் அளித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதில் அளித்தபோது கொரோனா 2-வது அலையில் நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையிலிருந்து தெரியவருகிறது. சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் வருவது, மாநில அரசுகளுக்கு உட்பட்டது. அவர்கள் அளித்த தகவலின்படி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நடக்கவில்லை எனத் தெரிவித்தார்.

கொரோனா 2-வது அலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில் மத்திய அமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றத்தில் தவறான தகவலை அளித்தமைக்காக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய அரசு கூறுகிறது. ஆனால் கொரோனா 2-வது அலையில் உயிரிழப்புகள் நடந்தன.

2-வது அலையின்போது, ஆக்சிஜன் ஏற்றுமதியை 700 சதவீதம் மத்திய அரசு அதிகரித்தது. கொரோனா 2-வது அலையின்போது, ஆக்சிஜன் வழங்குவதற்குப் போதுமான சிலிண்டர்களை மத்திய அரசு வழங்காததால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தனர்.

அதிகாரமிக்க குழு மற்றும் நாடாளுமன்றக் குழுவின் அறிவுரைகள் புறக்கணிக்கப்பட்டன. ஆக்சிஜன் சப்ளைக்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் பார்க்கவில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.


அமெரிக்கா - ரஷ்யா இடையே நடக்கும் Cyber War | Ransomware Cyber Attack



YAMAHA RX100 Styleல் அசத்தலான எலக்ட்ரிக் பைக்|5 ரூபாய்க்கு 100 கிலோமீட்டர்| Komaki MX3 E-Bike Review



தாய் பால் கொடுப்பதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க முடியுமா? | Benefits of Mothers Milk



ஒரு பைசா செலவில்லாமல் ஓடும் மோட்டார் சைக்கிளை தயாரித்த மாணவர்



தேனீ வளர்க்க கற்று கொடுத்து 80 பேரை லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வைத்து அசத்தல்



எனக்குEmotional Scenesல் நடிக்க ரெம்ப பிடிக்கும் சீமராஜா பட நடிகை அபிநயா | Seema Raja Actress Abhinaya



இள வயதிலேயே இந்தியன் சாம்பியன் டைட்டில் வென்ற கோம்பை நாய் |பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 18



Whatsapp Call மூலம் பெண்களை மயக்கி பணம் கேட்டு மிரட்டல்| மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? இதை அவசியம் சாப்பிடுங்க | K.தம்பிதுரை சித்த மருத்துவர்



22 கின்னஸ் சாதனைகளை படைத்து அசத்திய தமிழர் | 22 Guinness World Records Title Winner



Kanni | வளர்த்தவர் இருந்தால் மட்டுமே குட்டி போடும் பாசமான நாய்| பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 17



Tamil General Knowledge Questions and Answers|Brain Games Tamil|Tamil quiz | Interesting GK| Part 01



பிச்சை எடுத்து 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தானம் செய்த பிச்சைக்காரர் |Beggar Donates 50 Lakh Rupees



வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி? | Job Scams


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து