முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெகாசஸ் உளவு விவகாரம்: அமித்ஷா ராஜினாமா செய்ய கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்

புதன்கிழமை, 21 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சிதம்பரம்: பெகாசஸ் உளவு விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலிறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் நாட்டு நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலம் 50 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட தனிநபர்களின் செல்போன் எண்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில்  இந்தியாவை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன் எண்களும் உள்ளன. அவர்களில் 2 அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், ஒரு நீதிபதி, 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது எண்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் பெகாசஸ் உளவு விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலிறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி,

இந்தியாவில் இஸ்ரேல் உளவு பார்த்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். ஒட்டுக்கேட்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த உளவு விவகாரம் தொடர்பாக நீதிபதியை நியமித்து சுப்ரீம்கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து