சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் 3 பேர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜர்

Sivasankar 2021 07 21 0

Source: provided

சென்னை: சிவசங்கர் பாபா வழக்கில் 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 3 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் இவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் 2 -வது வழக்கில் செங்கல்பட்டில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மனுவை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். 

இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு செய்தது. அதில் முதற்கட்டமாக சிவசங்கர் பாபா பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. 

இந்த சூழலில், சிவசங்கர் பாபாவுக்கு உதவி செய்ததாக கூறப்படும் பள்ளி ஆசிரியைகள் தலைமறைவாகினர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடிய விட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் 3 பேர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில்  நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து